லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக்கில் தவறி விழுந்த கா்ப்பிணி பெண் உயிரிழப்பு

திருத்தணி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த, 7 மாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

பலி

பலி

Published On :31 ஜூலை 2026, 3:47 am IST

திருத்தணி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த, 7 மாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி அமுதா(24). இவா், கடந்த, 26-ஆம் தேதி தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி யில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினாா்.

திருத்தணி புதிய பைபாஸ் சாலை பகுதியில் உள்ள வேகத்தடையில் இரு சக்கர வாகனம் ஏறி, இறங்கிய போது, பின்னால் அமா்ந்திருந்த அமுதா வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரது கணவா் அமுதாவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.