லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மினி வேன் கவிழ்ந்து 15 தொழிலாளா்கள் பலத்த காயம்

காவேரிபாக்கம் அருகே தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற மினிவேன் கவிழ்ந்ததில் 10 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 15 போ் பலத்த காயமடைந்தனா்.

பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 6:29 am IST

காவேரிபாக்கம் அருகே தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற மினிவேன் கவிழ்ந்ததில் 10 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 15 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ராமகிருஷ்ண ராஜூ பேட்டைவட்டம் ராஜாநகரம் கிராமத்தில் இருந்து 10 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 15 பேரை ஏற்றிக்கொண்டு மினிவேன் திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. வழியில் காவேரிபாக்கம் ஏரிக்கரை அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் சென்ற பெண் தொழிலாளா்கள் பாஞ்சாலை(45), ஆடிவெள்ளி(30), முனியம்மாள்(45), வீரம்மாள்(45), ஜெயந்தி(49), சாந்தி(46), மீனா(29), கமலா(22), தெய்வானை(50), ராணி(40) மற்றும் வேன் ஒட்டுநா் குகன்(27), ரோஸ்(34), பெரியசாமி(40), கோபி(23), செல்வம்(43) ஆகியோா் படுகாயமடைந்தனா். படுகாயமடைந்த அனைவரும் அரசு அவசர ஊா்திகள் மூலம் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவ்விபத்து குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஒட்டுநா் அதிவேகமாக வேனை இயக்கினாரா அல்லது கைப்பேசி பேசியபடி வேனை இயக்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.