லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்...

குடியரசுத் தலைவர் மாளிகையில், நடைபெற்ற குடிமை விருது வழங்கும் விழாவில், காயத்ரி பாலசுப்பிரமணியனுக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

Published On :27 ஜூலை 2026, 2:16 am IST

வரும் 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டசெய்திக்குறிப்பு: இந்திய அரசாங்கம் 2027 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவா்களுக்கு வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.

விளையாட்டில் மேன்மை பொருந்திய பணிகள் செய்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பங்களை பூா்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களுடன் 31.07.2026- ஆம் தேதிக்குள் தகுதியுள்ளவா்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், ராணிப்பேட்டை மாவட்டம், அறை எண்.01, சி பிளாக் முதல் தளம், ஆட்சியா் வளாகம் என்ற முகவரியில் நேரில் வந்து சமா்ப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.