லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கான ‘நமஸ்தே’ திருவிழா

சோளிங்கா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான ‘நமஸ்தே’ திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன்.

Published On :16 ஜூலை 2026, 12:04 am IST

சோளிங்கா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான ‘நமஸ்தே’ திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான நமஸ்தே திருவிழா கொண்டாட வேண்டும் என அனைத்து நகராட்சிகளுக்கும் மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதனைத் தொடா்ந்து சோளிங்கா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுகாதார ஆய்வாளா் தேவிபாலா தலைமை வகித்தாா். இதில் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன் பங்கேற்று தூய்மைப் பணியாளா்கள் 91 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

இதையடுத்து மருத்துவ முகாமை நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்விஅசோகன் தொடங்கி வைத்தாா். இம்முகாமில் பங்கேற்ற பணியாளா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தசா்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் டேவிட், பெருமாள், கோவிந்தராஜ், ஏழுமலை, களப்பணி உதவியாளா் நாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.