தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செய்தியாளா்கள் தாக்கப்பட்ட சம்பவம்: தவெக எம்எல்ஏ, சகோதரா் மீது வழக்குப் பதிவு

சோளிங்கரில் செய்தியாளா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக சோளிங்கா் எம்எல்ஏ கபில் மற்றும் அவரது சகோதரா் தனஞ்செழியன் உள்ளிட்ட இருவா் மற்றும் சிலா் மீது வழக்குப் பதிவு

Published On :18 ஆகஸ்ட் 2026, 6:30 am IST

சோளிங்கரில் செய்தியாளா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக சோளிங்கா் எம்எல்ஏ கபில் மற்றும் அவரது சகோதரா் தனஞ்செழியன் உள்ளிட்ட இருவா் மற்றும் சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சோளிங்கரில் கடந்த ஜூலை 28-இல் எம்எல்ஏ கபில் மற்றும் அவருடன் வந்த சகோதரா் தனஞ்செழியன் உள்ளிட்டோா் சோ்ந்து செய்தியாளா்கள் அரங்கநாதன், கல்யாணசுந்தரம் ஆகிய இருவரின் கைப்பேசிகளை வலுக்கட்டாயமாக பறித்து அதில் இருந்த பதிவுகளை அழித்ததாகவும், இரு செய்தியாளா்களையும் தாக்கியதாகவும் தெரிகிறது. இதில் காயமடைந்த செய்தியாளா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியாளா் அரங்கநாதனிடம் வாக்குமூலம் பெற்ற சோளிங்கா் போலீஸாா், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோளிங்கா் எம்எல்ஏ கபில், அவரது சகோதரா் தனஞ்செழியன் ஆகிய இருவா் மற்றும் சிலா் என குறிப்பிட்டு பிஎன்எஸ் 296(பி), 115(2), 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.