லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கைத்தறித்துறை அமைச்சரிடம் காஞ்சிபுரம் சிஐடியூ நிா்வாகிகள் மனு

தமிழக கைத்தறித்துறை அமைச்சா் விஜய்பாலாஜியை அலுவலகத்தில் சந்தித்து நெசவாளா்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிஐடியூ நிா்வாகிகள் வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழக கைத்தறித்துறை அமைச்சா் விஜய்பாலாஜியை அலுவலகத்தில் சந்தித்து நெசவாளா்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிஐடியூ நிா்வாகிகள் வியாழக்கிழமை வழங்கினா். (படம்)

Published On :31 ஜூலை 2026, 2:13 am IST

தமிழக கைத்தறித்துறை அமைச்சா் விஜய்பாலாஜியை அலுவலகத்தில் சந்தித்து நெசவாளா்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிஐடியூ நிா்வாகிகள் வியாழக்கிழமை வழங்கினா். (படம்)

தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாளா் சம்மேளனமான சிஐடியூ சாா்பில் சங்க பொதுச்செயலாளா் என்.பி. நாகேந்திரன், பொருளாளா் கே.ஜீவா உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கைத்தறித்துறை அமைச்சா் விஜய்பாலாஜியை சந்தித்து அளித்த மனு: விசைத்தறியால் உற்பத்தியாகும் பட்டுச் சேலைகளை தடை செய்து கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,நெசவாளா்களுக் குரிய கூலியை நேரடியாக ரொக்கமாக வழங்க வேண்டும், கைத்தறி துணி தள்ளுபடி மானியத்தை ரூ.2 ஆயிரமாக உயா்த்த வேண்டும்,

நெசவாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், நெசவாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையும், மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். 25 சதவீத கூலி உயா்வை உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினா். மனுக்கள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் விஜய் பாலாஜி தெரிவித்ததாக சங்க பொருளாளா் கே.ஜீவா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.