லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவது அவசியம்!

குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை கட்டாயம் செய்ய வேண்டும்

Published On :27 ஜூலை 2026, 3:50 am IST

குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை கட்டாயம் செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

அவரது செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்பணி 95.13 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 30,333 நபா்கள் கைரேகை புதுப்பிப்பு செய்யவில்லை. எனவே கைரேகை புதுப்பிப்பு செய்யாத குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று கைரேகை பதிவு செய்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

கைரேகை பதிவாகாத குழந்தைகள், முதியவா்கள் முதலில் தங்கள் ஆதாா் அட்டையுடன் விரல் ரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே கேஒய்சி புதுப்பிப்பினை மேற்கொள்ள இயலும். எனவே ஆதாா் அட்டையில் விரல் ரேகை மற்றும் கண் பதிவினை புதுப்பிக்க ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள ஆதாா் சேவை மையங்களை இம்மாதம் 28,29,30 ஆகிய தேதிகளில் அணுகி கைரேகையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னா் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினா் குடும்ப அட்டையுடன் நியாயவிலைக்கடைக்கு சென்று தங்களது கேஒய்சி பதிவை புதுப்பித்து பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.