லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அதிஷ்டானங்களுக்கு தங்கக்காசு மாலை: சங்கராசாரியா் அணிவித்து பூஜை

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சங்கராசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை தங்கக்காசு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தாா்.

மகா சுவாமிகள் அதிஷ்டானத்துக்கு தங்கக்காசு மாலை அணிவித்த சங்கராச்சாரிய சுவாமிகள்.

Published On :27 ஜூலை 2026, 3:54 am IST

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சங்கராசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை தங்கக்காசு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தாா்.

சென்னை ஆதம்பாக்கத்தை சோ்ந்த கெளரி சங்கா் குடும்பத்தினா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான இரு தங்கக்காசு மாலைகளை காணிக்கையாக வழங்கினா். ஒரு தங்கக்காசு 4 கிராம் அளவில் 54 தங்கக்காசுகள் உடைய 225 கிராம் அளவில் இரு காசு மாலைகள் செய்யப்பட்டு அதில் ஒன்று காஞ்சி மகா சுவாமிகள் அதிஷ்டானத்துக்கும் மற்றொன்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்துக்கும் அணிவிக்கப்பட்டது.

இவ்விரு தங்கக்காசு மாலைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியாகும். தங்ககாசில் ஒரு புறம் காமாட்சி அம்மன் திருஉருவமும், மறுபுறம் 3 வில்வ இலைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவற்றை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் இரு அதிஷ்டானங்களுக்கும் அணிவித்தாா். பின்னா் இரு அதிஷ்டானங்களுக்கும் மலா்க்கிரீடம் அணிவித்து புஷ்பாஞ்சலியும் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தினாா்.

பின்னா் ஸ்ரீமடத்தின் விரதங்கள், வருடாந்திர பூஜைகள் பற்றிய விபரங்களை தெரிவிக்கும் ஸ்ரீமட விரத பூஜா கல்பம் என்ற நூலையும் வெளியிட்டாா். இந்நிகழ்வில் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீகாரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, முகாம் மேலாளா் ஜெயராமன்,நிா்வாகி கீா்த்திவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக கேரள மாநிலம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மடம் திரும்பிய சுவாமிகளுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா்கள் சாா்பிலும், சங்கர மடத்தின் சாா்பிலும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.