
தேவரியம்பாக்கத்தில் நெகிழிப் பொருள்களைப் போட பிரத்யேக கூண்டு
தேவரியம்பாக்கத்தில் நெகிழிப் பொருள்களைப் போட பிரத்யேக கூண்டு

தேவரியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள நெகிழி பாட்டில்கள் போடும் கூண்டினை ஆய்வு செய்த ஊராட்சி மன்ற தலைவா் அஜய்குமாா்
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை நெகிழி பாட்டில்களை போடுவதற்கென பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பயன்படுத்தி முடிந்த நெகிழி பாட்டில்கள், பொருள்களை போடுவதற்கென்று தனியாக பேருந்து நிறுத்தத்தில் பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக விளங்கும் நெகிழிக் கழிவுகளை தரம் பிரிப்பதை குறைக்கும் வகையில், நேரடியாகவே பொதுமக்கள் பயன்படுத்தி முடிந்த நெகிழி பாட்டில்களை இதில் போடும் வகையில், இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
ஜியோ இந்தியா பவுண்டேஷன் மற்றும் எக்ஸ்னோரா இண்டா் நேஷனல் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தேவரியம்பாக்கம் ஊராட்சியில் இது போன்ற கூண்டுகளை தேவரியம்பாக்கம் ஊராட்சி மூலமாக வைத்துள்ளனா்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவா் ம.த.அஜய்குமாா் கூறுகையில், கூண்டுகளில் சேகரிக்கப்படும் ெநிகழி பாட்டில்களின் துகள்கள் அரைக்கப்பட்டு தாா்ச் சாலைகள் அமைக்கம் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
Summary
Dedicated cage for disposing of plastic items in Devariyambakkam
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






