லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூரில்  ந ைபெஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  காங்கிரஸ்  கட்சியினா்.

Published On :23 ஜூலை 2026, 2:27 am IST

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதமா் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட எஸ்சி,எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் நிக்கோலஸ், புஷ்பராஜ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட செயலாளா் மண்ணூா் சரவணன், நகர பொருப்பாளா் வாசுதேவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கோஷங்கள் எழுப்பினா்.

இதையடுத்து திடீரென ஸ்ரீபெரும்புதூா் மணிக்கூண்டு பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.