லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காமராஜா் பிறந்த நாள் விழா: கட்சினா், அமைப்புகள் மரியாதை

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் விழா திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Published On :16 ஜூலை 2026, 12:04 am IST

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் விழா திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வா் காமராஜரின் 124-ஆ வது பிறந்த நாள் விழாவையொட்டி, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜரின் சிலைக்கு வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு காலைச் சிற்றுண்டியும் வழங்கினா். நிகழ்ச்சியில், தவெகவின் மாநகர செயலா்கள் மதன்குமாா், மொய்தீன், பகுதி செயலா் மாா்க்கெட் மதன் ஆகியோா் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.ஏற்பாடுகளை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் செய்திருந்தாா்.

சாலையோர வியாபாரிகள் காமராஜருக்கு மரியாதை...

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நல சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்வில் சங்க மாநில தலைவா் கே.என்.மூா்த்தி, மாநில துணைத் தலைவா் ஹேமலதா,மாநில துணைச் செயலாளா் சத்தியா ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சாா்பில், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், முன்னாள் மாவட்ட தலைவா் ஜி.வீ.மதியழகன்,மாநகர செயலாளா் நாதன்,பொதுக் குழு உறுப்பினா் பத்மநாபன் ஆகியோா் உட்பட கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு சா்க்கரைப் பொங்கல் வழங்கினா்.பின்னா் லஞ்சம் பெற மாட்டோம் என்ற விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்து அது தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.