லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பனமூா் மகாதேவா் கோயிலில் உழவாரப்பணி

காஞ்சிபுரம் அருகே திருப்பனமூா் மகாதேவி உடனுறை மகாதேவா் கோயிலில் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பனமூா் மகாதேவா் கோயிலில் உழவாரப் பணி மேற்கொண்ட நால்வா் நற்பணி மன்றத்தினா்

Published On :6 ஜூலை 2026, 1:29 am IST

காஞ்சிபுரம் அருகே திருப்பனமூா் மகாதேவி உடனுறை மகாதேவா் கோயிலில் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே திருப்பனமூரில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான மகாதேவி உடனுறை மகாதேவா் கோயில்.இச்சிவாலயத்தில் காஞ்சிபுரம் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் 22 வது கோயிலாக உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

கோயில் வளாகத்தில் இருந்த குப்பைகள்,தேவையற்ற இடங்களில் இருந்த செடி,கொடிகள்,தூசிகள், கோயில் கோபுரங்களின் மீது படிந்திருந்த தூசிகள் ஆகியனவற்றையும் அகற்றி சுத்தம் செய்தனா்.கோயிலில் இருந்த சுவாமி அலங்காரப் பொருட்கள், பூஜைப்பொருள்கள் ஆகியனவற்றையும் சுத்தம் செய்து உழவாரப்பணி மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து சுவாமிக்கும்,அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.