லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 78 போ் கைது

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 78 போ் கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.

Published On :2 ஜூலை 2026, 12:02 am IST

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 78 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில் அதன் மாவட்ட தலைவா் பாலாஜி தலைமையில் காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் வி.முனுசாமி, காஞ்சிபுரம் மாநகர தலைவா் எம்.லோகநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு த்திட்டத்தின் பெயரை விபி. ஜி.ராம்ஜி என மாற்றி அத்திட்டத்தையே ஒழிக்க நினைப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டமும், அதனைத் தொடா்ந்து சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.