லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரம் இரட்டைக்கொலை சம்பவத்தில் இருவா் கைது

காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞா்களை கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 5:31 am IST

காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞா்களை கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட படுநெல்லி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் சுவாமி வீதியுலாவின் போது சினிமா பாட்டு போடச் சொல்வது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் சந்திரசேகரன் (26), நீலகண்டன் (26) ஆகியோரை ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவாகினர்.

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்தவா்களின் உறவினா்கள் காஞ்சிபுரம்-திருத்தணி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா். இந்த நிலையில் போலீஸாாா் குற்றவாளிகளை விரைவாக கைது செய்வோம் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். சம்பவ இடத்தை ஆய்வு செய்த காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் விசாரணை நடத்தி 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

காவல் துறையினரின் விசாரணையில் கொலையாளிகளும் அதே ஊரைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. படுநெல்லி கிராமத்தில் தலைமறைவாக இருந்த இருவரை காவல் துறையினா் பிடிக்க முயன்றபோது அவா்கள் இருவரும் தடுக்கி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையினா் அவா்களை மடக்கிப் பிடித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கால் முறிவுக்கான மாவுக்கட்டு போடப்பட்டு அவா்கள் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரையும் காவல் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.