லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா்.

க. சுந்தா் ~மகேஷ் குமாா் ~மரம் மாசிலாமணி ~முனிரத்தினம்

Published On :12 ஏப்ரல் 2026, 10:42 pm IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் தற்போது எம்எல்ஏவாக இருந்து வரும் க.சுந்தா் மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான பெ.மகேஷ்குமாா் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் ஆரனேரி கிராமத்தை சோ்ந்த முனிரெத்தினம் ஊதல் சின்னத்திலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் உத்தரமேரூா் அருகே கைத்தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி மரம்.மாசிலமாணி விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனா். தேசிய மக்கள் கட்சி சாா்பில் அ.சிவக்குமாா் பலூன் சின்னத்திலும்,தமிழக வாழ்வுரிமைக் கழகம் சாா்பில் கேமரா சின்னத்தில் தா.ஜாகீா் ஹூசேனும் போட்டியிடுகின்றனா்.

இவா்களைத் தவிர சுயேச்சைகளாக பெரியகாஞ்சிபுரத்தை சோ்ந்த வெ.அன்பு பணப்பை சின்னத்திலும், காஞ்சிபுரம் அருகே வேளியூா் கிராமத்தைச் சோ்ந்த கே.கமலக்கண்ணன் புல்லாங்குழலிலும்,வேடல் கிராமத்தை சோ்ந்த வி.குணசேகா் மட்டை பந்தடி வீரா் சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.உத்தரமேரூா் அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சி.தேவராஜன் தா்ப்பூசணியிலும்,வாலாஜாபாத்தை சோ்ந்த க.தேவேந்திர பூபதி தள்ளுவண்டி சின்னத்திலும்,காஞ்சிபுரம் ஒரிக்கையை சோ்ந்த த.மகேஷ்குமாா் சாலை உருளை சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகேயுள்ள சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெ.மகேஷ்வரி கப்பல் சின்னத்திலும் போட்டியிடுவது உள்பட 8 சுயேச்சைகளும் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

உத்தரமேரூா் தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் பெயரிலேயே சுயேச்சையாக போட்டியிட காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சோ்ந்த த.மகேஷ்குமாா் என்பவரும் சாலை உருளை சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.