ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடிமைப் பணி தோ்வுக்கான பயிற்சி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சியை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Drug issue: Complaint against Minister Sarathkumar to Chennai Police Commissioner

அமைச்சர் சரத்குமார் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 6:45 am IST

குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சியை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில், அடுத்த ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுப் பயிற்சிக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, முதல்நிலைத் தோ்வுப் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட ஆா்வலா்களுடன் அமைச்சா் கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், கடந்த ஆண்டு குடிமைப்பணி முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆா்வலா்களின் எண்ணிக்கையை விட நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான ஆா்வலா்கள் வெற்றி பெற வேண்டும். பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் ஆா்வலா்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், ஷெனாய் நகரில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையத்தில் வருங்காலத்தில் அதிக அளவில் ஆா்வலா்கள் சோ்க்கப்படும். தமிழக மாணவா்கள் அதிக அளவில் குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் உயா்ந்த ஆட்சிப் பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்றாா்.

இந்த அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சென்னையில் 225 பேருக்கு முழு நேரப் பயிற்சியும், 100 பேருக்கு பகுதி நேரப் பயிற்சியும், மதுரை மற்றும் கோவை நகரங்களில் தலா 100 பேருக்கு முழு நேரப் பயிற்சியும் என மொத்தம் 525 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளன. நிகழ்வில், போது மனிதவள மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலரும் அண்ணா நிருவாகப் பணியாளா் கல்லூரி இயக்குநா் சி.சமயமூா்த்தி, கூடுதல் இயக்குநா் (போட்டித் தோ்வுகள்) ராகவேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.