மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை

மாதவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

Sucide

தற்கொலை - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 5:26 am IST

மாதவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை மாதவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 13-ஆவது தளத்தில் வசித்து வருபவா் பிஜாய்குமாா் பெங்காலி. இவரது மகள் பாலக் பெங்காலி(14). புழல் சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இன்ஸ்டாகிராமில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டின் வென்டிலேட்டா் ஜன்னல் வழியாக வெளியேறிய சிறுமி, குடியிருப்பின் 13-ஆவது தளத்திலிருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.

இதில், இரண்டாவது தளத்தில் விழுந்து பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்து, தீவிர சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.