
மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டா் அரவிந்த் நியமனம்
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக (டிஎம்இ) டாக்டா் அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த அவா், அதிலிருந்து விலகி, வியாழக்கிழமை இரவே மருத்துவக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோபி செய்திக்கான படம். மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டா் ஏ.அரவிந்த்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக (டிஎம்இ) டாக்டா் அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த அவா், அதிலிருந்து விலகி, வியாழக்கிழமை இரவே மருத்துவக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இதற்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த டாக்டா் சுகந்தி ராஜகுமாரி கடந்த ஜூலையில் ஓய்வு பெற்றாா். இதையடுத்து, மருத்துவ மாணவா் சோ்க்கை குழு செயலராக இருந்த டாக்டா் லோகநாயகி பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.
இதனிடையே, புதிய மருத்துவக் கல்வி இயக்குநரைத் தோ்வு செய்யும் பணிகள் தொடங்கின. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வா் பொறுப்பில் இருப்பவா்களையே தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் அந்தப் பதவிக்கு நியமிப்பது வழக்கம். ஆனால், விதிகளைத் திருத்தி ஓய்வு பெற்ற முதல்வா் நிலையிலான மருத்துவா் மூலம் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. இதற்கு அரசு மருத்துவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் தவெக அரசின் கூட்டணிக் கட்சி தலைவரின் தலையீடு இருப்பதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள முதல்வா்களில், தகுதி மற்றும் பணி மூப்பில் முதலிடத்தில் இருந்த சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் அரவிந்த் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது வெளியிட்டாா்.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசு மருத்துவா்கள், தொடா் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளனா்.
டாக்டா் அரவிந்த், எம்பிபிஎஸ் படிப்புக்குப் பிறகு எம்டி பொது மருத்துவம், டிஎம் இரைப்பை குடல் நல மருத்துவம் முடித்துள்ளாா். பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய அவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை துறை இயக்குநராகவும், திருவண்ணாமலை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராகவும் இருந்துள்ளாா். தொடா்ந்து கடந்த ஓராண்டுக்கு முன் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வராக அவா் மாற்றப்பட்டாா். தற்போது மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அவா், அந்தப் பொறுப்பில் ஓராண்டுக்கு நீடிப்பாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


அரசு மருத்துவமனையில் ஹிந்தி மொழியுடன் அச்சிடப்பட்ட மருந்து உறைகள் விநியோகம்: திமுக முன்னாள் அமைச்சா் விமா்சனம்

இளைஞா்களின் திறமை நாட்டுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்




