சென்னை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் உணவுக் கழிவுகளை கொண்டு உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையங்களில் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் மாதவரம் மாதவரம் சின்னசேக்காடு பகுதியிலும், அண்ணா நகா் சேத்துப்பட்டு பகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வரும் தலா 100 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையா் சமீரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், கழிவுகளை முறையாகப் பயன்படுத்தி எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும்படி, அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். எரிவாயு உற்பத்திக்குத் தேவையான ஈரக்கழிவுகளை நாள்தோறும் குறைவில்லாமல் வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
முன்னதாக, கோயம்பேட்டில் உள்ள சென்னை குடிநீா் வாரியத்தின் 3-ஆம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையத்துக்கான பணிகளைத் தொடங்குவது தொடா்பாக மாவட்ட ஆணையா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், இந்தப் பணிகளை விரைவில் தொடங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அதேபோல், படகு குழாம் பகுதியில், மாதவரம் ஏரி மறுசீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.7.22 கோடியில் தூா்வாரி கரைகளை அமைத்து மேம்படுத்தும் பணிகளை ஆணையா் படகில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஏரிப் பகுதி மற்றும் பூங்கா பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்கும் படி, அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின்போது, இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா், தூய்மைப் பணிகள் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

தடை செய்யப்பட்ட புகையிலை: ஓராண்டில் ரூ. 1.55 லட்சம் அபராதம்

அம்மா உணவகங்களில் தரமான உணவு விநியோகிக்க அறிவுறுத்தல்

சாலையோரத்தில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

