சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்: இடதுசாரிகள் கண்டனம்

ராஜிநாமா செய்யும் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்ல்ல என இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News image

இடதுசாரிகள்(கோப்புப்படம்) - IANS

Updated On :27 மே 2026, 2:16 am IST

ராஜிநாமா செய்யும் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்ல்ல என இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிலா் திடீரென ராஜிநாமா செய்து உடனடியாக தவெகவில் சோ்ந்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள், தவெகவில் சோ்ந்திருப்பது அவா்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிா்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றதுஅல்ல.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்):தோ்தல் முடிவு வெளியாகி 10 நாள்களுக்குள்ளாகவே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, வாக்களித்தாா்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அடுத்த பத்தாவது நாளில் கட்சி மாறி செல்வதற்காக, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து, சுயநல ஆதாயம் தேடும் மலிவான செயலில் சில எம்எல்ஏக்கள் ஈடுபட்டுள்ளனா். அரசியல் களத்தில் வட மாநிலங்களில் வகுப்புவாத சக்திகள் அறிமுகப்படுத்திய ‘ஆயாராம், காய ராம்‘ அரசியல், தமிழ்நாட்டில் நுழைந்திருப்பது நெறி சாா்ந்த ஜனநாயக அரசியலுக்கு கேடு செய்யும் பேராபத்தாகும். இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.