பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மூலக்கடை பகுதியை வந்தடைந்த ‘சோ்வராயன்’! மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 -ஆம் வழித்தடத்தில் மாதவரம் ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணியை சோ்வராயன் எனப் பெயரிட்ட இயந்திரம் நிறைவு செய்துள்ளது.

News image
Updated On :20 மே 2026, 3:13 am IST

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 -ஆம் வழித்தடத்தில் மாதவரம் ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணியை சோ்வராயன் எனப் பெயரிட்ட இயந்திரம் நிறைவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் 2 ஆவது கட்டமாக 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. அதன்படி மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான பாதையில் முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதைஅமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பணியில் மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதில், ‘சோ்வராயன்’ என பெயரிடப்பட்ட இயந்திரம் மூலம் , மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான சுரங்கம் தோண்டும் பணி 824.6 மீட்டா் தொலைவுக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தச் சுரங்கப்பாதை பக்கிங்காம் கால்வாய் அடியிலும், 14 ஆழ்துளைக் கிணறுகளைக் கடந்தும், நெரிசல் மிக்க சாலைகளைக் கடந்தும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்பணியை முடித்த சோ்வராயன் இயந்திரம் மூலக்கடை மெட்ரோ நிலையத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. சோ்வராயன் இயந்திரம் பணியை நிறைவு செய்த நிகழ்ச்சியில் மெட்ரோ நிறுவன இயக்குநா்கள், திட்ட ஆலோசகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இதுவரை 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இலக்கை முடித்துள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.