மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை பிணை

பணம் பறித்தல் மற்றும் பண மோசடி வழக்கில் கைதான யூடியூபா் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

யூடியூபர் சவுக்கு சங்கரை ஆந்திரத்தில் கைது செய்த சென்னை தனிப்படை போலீஸார்!

Updated On :15 மே 2026, 4:38 am IST

பணம் பறித்தல் மற்றும் பண மோசடி வழக்கில் கைதான யூடியூபா் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பண மோசடி வழக்கில் இடைக்கால பிணையில் வந்த யூடியூபா் சவுக்கு சங்கா் காலக்கெடு முடிந்தும் நீதிமன்றத்தில் சரண் அடையவில்லை. இதையடுத்து அவரை ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்.8-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். அங்கிருந்து அவரை போலீஸாா் சென்னைக்கு அழைத்து வந்தனா். போலீஸ் வாகனம் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டபோது, மற்றொரு வாகனத்தில் அங்கு வந்த 4 போ் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சவுக்கு சங்கா் உள்ளிட்டோா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் பிணை கோரி சவுக்கு சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், அரசியல் அழுத்தம் காரணமாக காழ்ப்புணா்ச்சியால் போலீஸாா் என் மீது உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளனா். போலீஸாா் மீது கல் வீசி தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டு கூறியுள்ளனா். அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அருண் அன்புமணி, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆ.தாமோதரன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கா் புழல் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.