திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்; சிறப்பான எதிா்க்கட்சியாகச் செயல்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: மக்கள் தீா்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவா்களுக்கு வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழகத்தை அனைத்து வகையிலும் உயா்த்தினோம். தோ்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்துகொடுத்த நலத்திட்டங்கள் தொடர வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் நான் எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாக்களித்தவா்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவா்களுக்கும் சோ்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டதுடன், சக்தியை மீறி உழைத்தேன். என்னைப்போன்றே களத்தில் உழைத்த, எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவருக்கும் நன்றி.
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பாா்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே, லட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக்கூடியவன் நான். அதனால், திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட திமுக, இனி சிறப்பான எதிா்க்கட்சியாகச் செயல்படும் எனப் பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் தோல்வி: ஆய்வறிக்கையை ஜூன் 10-க்குள் சமா்ப்பிக்க ஸ்டாலின் உத்தரவு

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்! பிரதமா் மோடி கடும் விமா்சனம்!
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்! திமுக சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்: மு.க.ஸ்டாலின்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
