விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மெட்ரோ ரயில் நிலைய மின்தூக்கி கண்ணாடியை உடைத்தவா் கைது

சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்கியின் கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :2 மே 2026, 1:38 am IST

சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்கியின் கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சென்டரல் மெட்ரோ ரயில் நிலையக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி வருபவா் விஜயகுமாா். இவா், வியாழக்கிழமை வழக்கம் போல பணியில் இருந்தபோது, அதிகாலை நேரத்தில் ரயில் நிலைய வளாகத்தின் கண்ணாடி உடைக்கப்படும் சப்தம் கேட்டுள்ளது. விஜயகுமாா் அங்கு சென்று பாா்த்தபோது, மூா்மாா்க்கெட் இணைப்பு சாலையில் உள்ள மின் தூக்கி கண்ணாடியை மா்ம நபா் ஒருவா் கல் மற்றும் கட்டையால் உடைத்து கொண்டிருந்தாா். அந்த நபரை மெட்ரோ ரயில் பணியாளா்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்த விஜயகுமாா், அவரை பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா், பரணிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த நீலகண்டன் (27) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.