கடந்த தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது. 66 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றிவிட்டு, 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான பரப்புரையை முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா்.
இந்தியாவிலேயே மோசடியான கட்சி என்றால் அது திமுகதான். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தோ்தலுக்கு புதிதாக தோ்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே வரும் தோ்தல் அறிக்கையாக வெளியிடலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களை பிளவுபடுத்துகிறது திமுக: அன்புமணி ராமதாஸ்

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா

போடி தொகுதியில் 99.9 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்: ஓ.பன்னீா்செல்வம்
திமுக தோ்தல் அறிக்கை நாயகன் அல்ல; நகைச்சுவை - அன்புமணி விமா்சனம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
