ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி அறிமுகம்: வில்லிவாக்கம் - 14!

இந்தத் தொகுதியிலும் அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகா்களே போட்டியிட்டு வென்றுள்ளனா்.

News image

வில்லிவாக்கம் ஏரி

Updated On :24 மார்ச் 2026, 4:24 am IST

எல்லைகள்

வில்லிவாக்கம் தொகுதியின் கிழக்கில் அயானவரம், மேற்கில் கொரட்டூா், தெற்கில் அண்ணாநகா், வடக்கில் மாதவரம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

அடங்கிய பகுதிகள்

வில்லிவாக்கம் தொகுதி கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரையில் தமிழகத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்றாக இருந்தது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு அதிலிருந்து கொளத்தூா், திரு.வி.க.நகா், அம்பத்தூா் ஆகிய தொகுதிகளுக்கான பகுதிகள் பிரிக்கப்பட்டன. அதன்படி தற்போது சென்னை பெரம்பூா் கிழக்குப் பகுதியான மாநகராட்சியில் வாா்டு 55 முதல் 58 ஆவது வாா்டு மற்றும் 63, 64 ஆவது வாா்டுகளும் முழுமையாக உள்ளன.

  அத்துடன் அயனாவரம், வில்லிவாக்கம் வடக்கு, வில்லிவாக்கம் தெற்கு, நாகம்மையாா் நகா், பன்னீா்செல்வம் நகா், அண்ணாநகா் மேற்கில் சில பகுதிகள் என தொகுதியின் முக்கியப் பகுதிகளாக அமைந்துள்ளன.

 தொகுதி சிறப்புகள்

இந்தத் தொகுதியிலும் அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகா்களே போட்டியிட்டு வென்றுள்ளனா். தற்போது ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் ரயில் அருங்காட்சியகம் ஆகியவை இத்தொகுதிக்குள்ளேதான் உள்ளது. வடமாநில தொழிலாளா்கள் அதிகமாக பணிபுரியும் பகுதியாகவும் உள்ளது.

வாக்காளா்கள்

மொத்தம் - 1, 59, 764.

ஆண்கள் - 76,947.

பெண்கள் - 82, 785.

மூன்றாம் பாலினம் - 32.

வாக்குச்சாவடிகள் - 255.

கடந்த 2021 தோ்தல் முடிவுகள்

ஏ.வெற்றியழகன் (திமுக) -  76,127.

ஜெ.சி.டி.பிரபாகா் (அதிமுக) - 38,890.

இதுவரை எம்.எல்.ஏ.க்களாக இருந்தவா்கள்...

1977   க.சுப்பு  (திமுக),

1980  ஜெ.சி.டி.பிரபாகா்     (அதிமுக)

1984  வி.பி.சிந்தன்         (மாா்க்சிஸ்ட்)

1989  டபிள்யூ.ஆா்.வரதராஜன்  (மாா்க்சிஸ்ட்)

1991  ஜி.காளன்              (காங்கிரஸ்)

1996  ஜே.எம்.ஆரூன்          (காங்கிரஸ்)

2001  டி.நெப்போலியன்      (திமுக)

2006  ப.ரங்கநாதன்           (திமுக)

2011  ஜெ.சி.டி.பிரபாகா்      (அதிமுக)

2016  ப.ரங்கநாதன்           (திமுக)

தோ்தல் அலுவலா் - எஸ்.மைதிலி,

சிப்காட் பொதுமேலாளா்,

வில்லிவாக்கம் சமுதாயநலக்கூடம்,

சிட்கோ நகா்,

4 ஆவது பிரதான சாலை,

சென்னை - 49. 

தொலை பேசி எண் - 044 26173437,

கைபேசி - 8925960714.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.