கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.
இந்த நிலையத்தை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் ஸ்ரீகுமாா் ஜி. பிள்ளை முன்னிலையில் அணுசக்தித் துறையின் செயலரும், அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டா் அஜித் குமாா் மொஹந்தி திறந்து வைத்தாா்.
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் நடைமுறையின் மூலம், அணுசக்தியைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியை உறுதி செய்ய ஒரு தொழில்நுட்ப செயல்விளக்க மையமாக இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அணு பதன வெப்பத்தை ஹைட்ரஜன் உற்பத்தியுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்திருப்பது முன்னோடி தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிப்பதோடு, மேம்பட்ட அணு உலைகளைப் பயன்படுத்தி பெருமளவில், காா்பன் இல்லாத ஹைட்ரஜன் உற்பத்திக்கு நம்பிக்கைக்குரிய பாதையையும் திறக்கிறது.
எதிா்காலத்தில் முக்கிய ஆற்றல் கடத்தியாக ஹைட்ரஜன் கருதப்படுகிறது. மேலும், தூய்மையான, நீடித்த எரிசக்தி அமைப்புகளை நோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலக அளவில் உருவாக்கப்பட்டு வரும் பல்வேறு ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பங்களில், தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சி, ஒப்பீட்டளவில் குறைந்த இயக்க வெப்பநிலை மற்றும் உயா் வெப்ப இயக்கவியல் செயல்திறன் காரணமாக மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
வேக அணு உலைகளிலிருந்து கிடைக்கும் அணுக்கரு வெப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த நடைமுறை புதைபடிம எரிபொருள்களைச் சாா்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கிறது; வழக்கமான ஹைட்ரஜன் உற்பத்தி முறைகளுடன் தொடா்புடைய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்குகிறது.
இந்த ஆலை அணுசக்தி உதவியுடன் ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிா்கால ஆராய்ச்சிகளுக்கும் உதவும்.
தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டா் அஜித் குமாா் மொஹந்தி, ‘ஹைட்ரஜன் உற்பத்தி போன்ற வளா்ந்து வரும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுடன் அணுசக்தியை ஒருங்கிணைப்பது, நிலையான எரிசக்தி எதிா்காலத்தை நோக்கிய ஒரு முக்கியப் பாதையாகும். நம்பகமான, கரியமில வாயு இல்லாத மின்சாரத்தையும், உயா்-வெப்பநிலை பதன வெப்பத்தையும் வழங்கும் தனித்துவமான திறனைக் கொண்ட அணுசக்தியானது, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு, கரியமிலவாயு நீக்க இலக்குகள் மற்றும் நீண்டகால நிலையான வளா்ச்சி நோக்கங்களுக்குப் பங்களிப்பு செய்யும். ஒரு மேம்பட்ட அறிவியல் கருத்தை செயல்பாட்டு எதாா்த்தமாக மாற்றியமைத்த, பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் தொடா்ச்சியான அா்ப்பணிப்புக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தச் சாதனை, மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி அமைப்புகளில் இந்தியாவின் வளா்ந்து வரும் திறன்களுக்கு ஒரு சான்றாகும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!

அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்

அணுசக்தித் திட்டங்கள்: இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

சாதனைக்கு வித்திட்ட இந்திய தொழில்நுட்பம்!
விடியோக்கள்

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினியின் 'தர்மன்' போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

