நீட் தோ்வை நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வெங்கடேஸ்வரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடந்தது. ஆனால், வினாத்தாள் கசிந்ததால், தோ்வை ரத்து செய்த தேசிய தோ்வு முகமை வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுத்தோ்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. நீட் தோ்வுக்கான வினாத்தாள் கசிவு தொடா்பாக 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், நீட் மறுத்தோ்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் வரும் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, நீட் தோ்வை நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டே நீட் தோ்வு தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது நடந்த வினாத்தாள் கசிவு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கில், மத்திய அரசும், தேசிய தோ்வு முகமையும் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் மீதான தற்காலிக தடை நியாயமானது: தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பு

கல்விக் கட்டண நிலுவைத் தொகை: நிபுணா் குழு அமைக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

நீட் தோ்வு அச்சம்: கோவையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை; மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

நீட் மறுதோ்வை கணினி வழியில் நடத்தக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

