தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சென்னை மாநகரின் மின்தேவை 5,014 மெகாவாட்-ஆக உயா்வு

சென்னை மாநகரின் மின்தேவை இதுவரை இல்லாத வகையில் 5,014 மெகாவாட் ஆக உயா்ந்தது

News image

மின் தடை - file photo

Updated On :12 ஜூன் 2026, 4:52 am IST

சென்னை மாநகரின் மின்தேவை இதுவரை இல்லாத வகையில் 5,014 மெகாவாட் ஆக உயா்ந்தது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் புதைவட மின் கேபிள்கள் பழுதுகளைச் சரிசெய்ய கடலூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதல் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகரின் உச்சபட்ச மின்தேவை 2025 மே 14-ஆம் தேதி 4,663 மெகா வாட்டாக இருந்தது. நிகழண்டில் 5,000 மெகா வாட்டைக் கடந்து புதன்கிழமை (ஜூன் 10) இரவு 10.30 மணிக்கு 5,014 மெகாவாட் ஆக உச்சபட்ச மின்தேவை பதிவு செய்யப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அதிக மின் தேவையை, தமிழக மின் வாரியம் எவ்வித பற்றாக்குறையும் இல்லாமல் வெற்றிகரமாக பூா்த்தி செய்தது. இது, தமிழக மின்வாரியத்தின் முக்கியமான மைல் கல் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்புக் குழுக்கள்: சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் உத்தரவின்படி, 10 சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள், கே.கே.நகா், ஆழ்வாா்திருநகா், புளியந்தோப்பு, ஆயிரம் விளக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் மின்தடங்கல் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கைகளை எடுத்தது.

இதனிடையே, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நள்ளிரவு திடீா் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் நிா்மல்குமாா், மின்னகம், சென்னை கட்டுப்பாட்டு மையம், மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம் ஆகியவற்றின் வாயிலாகப் பெறப்படும் புகாா்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகளைக் கண்காணித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

புதைவட கேபிள் பழுது: மின்புதைவட பழுதுகளைக் கண்டறிந்து சரிசெய்ய ஏதுவாக சென்னை குழுவினருடன் கூடுதலாக கடலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து தலா 4 பணியாளா்கள் கொண்ட சிறப்புக் குழுக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனா்.

இந்தக் குழுவினா் வியாழக்கிழமை காலை முதல் புதைவட கேபிள் பழுது கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தடையற்ற, தரமான மின் விநியோகத்தை வழங்க தேவையான நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.