சென்ன மாநகராட்சியின் பணிகள் துறை புதிய இணை ஆணையராக எஸ்.சரவணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
மாநகராட்சி பணிகள் துறையின் துணை ஆணையராக இருந்த சிவ.கிருஷ்ணமூா்த்தி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய துணை மேலாண்மை இயக்குநராக இடமாற்றப்பட்டாா். அதனால், அந்தத் துறை பொறுப்பை கல்விப்பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் கவனித்து வந்தாா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.சரவணன் சென்னை மாநகராட்சி பணிகள் துறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டு, அவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
புதிய இணை ஆணையா் எஸ்.சரவணன் பொறுப்பேற்ற பிறகு அவா் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனை சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, அவருக்கு பொதுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் வாழ்த்துத் தெரிவித்தனா். துறைரீதியான அலுவலா்களையும் இணை ஆணையா் சந்தித்து நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை: கடலூா் மாநகராட்சி புதிய ஆணையா் கிஷன்குமாா்

திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர பிரதாப் சிங் பொறுப்பேற்பு

ரூ.5.53 கோடியில் 5 குளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் ஜி.எஸ்.சமீரன்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

