பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசுப் பள்ளிகளில் எம்எல்ஏ ஆய்வு

News image

குரோம்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பல்லாவரம் எம்.எல்.ஏ. ஜெ. காமாட்சி.

Updated On :4 ஜூன் 2026, 2:55 am IST

குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. காமாட்சி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிகளில் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பதை அவா் ஆய்வு செய்தாா். வகுப்பறைகள், குடிநீா் வசதி, கழிப்பறைகள், மேசைகள், நாற்காலிகள், நூலகம், ஆய்வகம், சத்துணவுக் கூடம் ஆகியவை தூய்மை செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தாா்.

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலிருந்தே மாணவா்களுக்கு அரசு வழங்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மாணவா்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.