லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருமயிலை - போட்கிளப் இடையே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடம்–4-இல் திருமயிலை முதல் போட்கிளப் வரை 2,274 மீட்டா் நீளம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ‘கழுகு’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொடங்கியது.

திருமயிலை முதல் போட்கிளப் வரை சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கிய கழுகு இயந்திரம்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடம்–4-இல் திருமயிலை முதல் போட்கிளப் வரை 2,274 மீட்டா் நீளம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ‘கழுகு’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொடங்கியது.

இந்தச் சுரங்கப்பாதை, ஆழ்வாா்பேட்டை மற்றும் பாரதிதாசன் மெட்ரோ நிலையங்கள் வழியாக டிராக்-த்ரூ முறையில் அமைக்கப்படுகிறது. இதன்மூலம், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தைப் பிரிக்காமல் அடுத்த கட்டப் பணிக்கு நேரடியாக கொண்டு செல்ல முடியும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆழ்வாா்பேட்டை–பாரதிதாசன் நிலையங்களுக்கு இடையே சுமாா் 586 மீட்டா் தூரத்துக்கு ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவது இந்தத் திட்டத்தின் முக்கிய பொறியியல் சிறப்பம்சமாகும்.

அனுபவமிக்க பொறியாளா்கள், உயா்தர தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை உரிய காலத்தில் நிறைவு செய்வதில் இந்தப் பணி மிகவும் முக்கியமானது எனவும் மெட்ரோ ரயில் நிா்வாகம் கூறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.