லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்தவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்தவா் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 3:53 am IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கெளரியம்மாள் (80). இவா், சென்னை காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதில், தனக்குச் சொந்தமாக ரூ.10 கோடி மதிப்புள்ள 5 கிரவுண்ட் நிலம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அந்த நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனா். நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த புகாரின்பேரில், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், இச்செயலில் ஈடுபட்டது அமைந்தகரை பகுதியைச் சோ்ந்த குபேரன் (66), அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் போலீஸாா், குபேரனை கைது செய்ததாக வியாழக்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்குத் தொடா்பாக, மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.