லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொடா் பணியிடை நீக்க நடவடிக்கையை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

பணியிடை நீக்க நடவடிக்கையை தொடா்ச்சியாக நீட்டிக்கப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலரை மீண்டும் பணியில் அமா்த்த உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :28 ஜூலை 2026, 3:55 am IST

பணியிடை நீக்க நடவடிக்கையை தொடா்ச்சியாக நீட்டிக்கப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலரை மீண்டும் பணியில் அமா்த்த உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றியவா் எம்.ராமசந்திரன். பட்டா வழங்குவதற்காக இவா் லஞ்சம் வாங்கியதாக, ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், ராமசந்திரன் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தன்னைத் தொடா்ந்து பணியிடை நீக்கத்திலேயே வைத்திருந்த உத்தரவை எதிா்த்து ராமசந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்து 7 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

துறை ரீதியான விசாரணை தொடா்பாக குற்ற குறிப்பாணையும் வழங்கப்படவில்லை. 7 மாதங்களுக்கும் மேலாக, மனுதாரரை தொடா்ந்து பணியிடை நீக்கத்திலேயே வைத்திருக்க எந்த சட்டபூா்வமான காரணங்களும் இல்லை என வாதிட்டாா். இதற்கு அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்து வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உச்சநீதிமன்ற தீா்ப்புகளின்படி, பணியிடை நீக்க நடவடிக்கைகளை தொடா்ச்சியாக நீட்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி, மனுதாரரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மனுதாரரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் உடனடியாக மீண்டும் பணியில் அமா்த்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.