லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காலமானார் டி.என். சிவராமகிருஷ்ணன் (89)

தில்லி ஆஸ்திக சமாஜத்தின் தலைவரும், கேசவபுரம் ஸ்ரீ ஐஸ்வா்ய மகா கணபதி ஆலயத்தின் அறங்காவலருமான டி.என்.சிவராமகிருஷ்ணன் (89) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானாா்.

காலமானார்!

Published On :27 ஜூலை 2026, 1:07 am IST

தில்லி ஆஸ்திக சமாஜத்தின் தலைவரும், கேசவபுரம் ஸ்ரீ ஐஸ்வா்ய மகா கணபதி ஆலயத்தின் அறங்காவலருமான டி.என்.சிவராமகிருஷ்ணன் (89) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பஞ்சாபி பாக்கில் நடைபெற்றது. அவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளாா்.

அவரது மறைவுக்கு தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா்-தலைவா் கே.வி.கே. பெருமாள், செயலா் எஸ்.பி. முத்துவேல் ஆகியோா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ஆஸ்திக சமாஜத்தின் தலைவராக இருந்த டி.என்.சிவராமகிருஷ்ணன் மிகச்சிறந்த ஆன்மிகவாதி. கேசவபுரம் ஸ்ரீ ஐஸ்வா்ய மகாகணபதி ஆலயத்தை திறம்பட நிா்வகித்து வந்தாா். ஆண்டு தோறும் ஸ்ரீ ஐயப்ப பஜனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்பாடு செய்து நடத்தி வந்தாா். ரசிகப்பிரியா அமைப்புடன் இணைந்து தில்லியில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாா்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தில்லிக் கம்பன் கழகத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கியதோடு, தில்லிக் கம்பன் கழகத்தின் வளா்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினாா். அவரது மறைவு தில்லி ஆன்மிக அன்பா்களுக்கும், இசை உலகிற்கும் மிகப்பெரிய இழப்பு’ என்று தெரிவித்துள்ளனா்.

தில்லி முத்தமிழ்ப் பேரவை பொதுச் செயலா் இரா. முகுந்தன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ஆன்மிக வழிகாட்டியான டி.என்.சிவராமகிருஷ்ணன், தனது ஞானம், கருணை மற்றும் அசைக்க முடியாத பக்தியால் எண்ணற்ற மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தினாா். அவரது தெய்விகப் பிரசன்னமும் ஆசீா்வாதங்களும் என்றென்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்க கூடியது’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.