லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிம் காா்டு விற்பனை முகமை உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்: பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் சிம் காா்டு, ரீசாா்ஜ் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை செய்ய முகவா் உரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 2:09 am IST

பிஎஸ்என்எல் சிம் காா்டு, ரீசாா்ஜ் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை செய்ய முகவா் உரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் சிம் காா்டுகள், ரீசாா்ஜ் சேவைகள் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொள்ள முகவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தொலைத்தொடா்பு துறையில் அனுபவம் உள்ளவா்கள் இந்தியாவைச் சோ்ந்த தனியுரிமை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் உள்ளிட்டவை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, சென்னை தொலைத்தொடா்பு வரம்புக்குள்பட்ட சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிகள், விதிமுறைகள், நிபந்தனைகள், முக்கிய தேதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடா்பான ஆவணத்தை மத்திய பொதுக் கொள்முதல் இணையதளத்தில் (இடடட) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பம் உள்ள தகுதியான நிறுவனங்கள் வரும் ஆக. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.