லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து

சென்னை ரயில்வே கோட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 22) முதல் 3 நாள்களுக்கு 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 4:19 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 22) முதல் 3 நாள்களுக்கு 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் பேடாபரியா மற்றும் நாயுடுபேட்டை ரயில் நிலையங்களில் வரும் 23, 25, 27, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12.20 மணி முதல் மாலை 6.20 மணி வரை தண்டவாள மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக வரும் 23, 25, 27, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் புறநகா் மின்சார ரயில்கள் (மெமு) விவரம்:

சென்னை மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து அன்றைய தினங்களில் அதிகாலை 1.05 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் மெமு ரயில், இரவு 11.40 மணிக்குப் புறப்பட்டு ஆவடி செல்லும் ரயில், சூலூா்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்குப் புறப்பட்டு நெல்லூா் செல்லும் மெமு ரயில், இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் மெமு ரயில், நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் மெமு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.