லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 10 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :22 ஜூலை 2026, 4:24 am IST

சென்னை பெருநகர காவல் துறையில் 10 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் ஆய்வாளா்கள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக 10 ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதில், முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் பி.கமலாதேவி வண்ணாரப்பேடடை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், ஆய்வாளா் கே.புஷ்பராணி விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், எழும்பூா் சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளா் பி.ராஜேந்திரன் தலைமைச் செயலக காலனி குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 10 ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.