லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரெளடி வெட்டிக் கொலை

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கொலை... - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 1:59 am IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஓட்டேரி எஸ்விஎம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நா.அஜய் (20). இவா், மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரெளடி அஜய், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பி பிளாக் வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அங்கு 3 மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், அஜய்யை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தது. தகராறு முற்றவே அந்தக் கும்பல் அஜய்யை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அஜய் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.