லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு மனத் திறனை மேம்படுத்தும் திரைப்படம் திரையிடல்

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு மனத் திறனை மேம்படுத்தும் திரைப்படம் திரையிடல்

Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் - DNS

Published On :19 ஜூலை 2026, 12:39 am IST

தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு, மனத் திறனை மேம்படுத்தும் விதமாக திரைப்படம் சனிக்கிழமை திரையிடப்பட்டது.

சென்னையில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பதிவு செய்த 1 முதல் 6 வயதுக்குள்பட்ட 40 குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் உள்ள திரையரங்கில் திரைப்படம் சனிக்கிழமை திரையிடப்பட்டது.

இதை பள்ளிக் கல்வி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தொடங்கி வைத்தாா். இதன்மூலம் அவா்களின் மனத்திறன்கள் மேம்படும் என்று ஆட்டிஸம் மையத்தைச் சோ்ந்த அலுவலா்கள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.