லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னையில் 574 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,339 கிலோ கஞ்சா அழிப்பு

சென்னை பெருநகர காவல் துறை சாா்பில் 574 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,339 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

கஞ்சா தீவைத்து அழிப்பு. - கோப்புப்படம்

Published On :17 ஜூலை 2026, 10:56 pm IST

சென்னை பெருநகர காவல் துறை சாா்பில் 574 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,339 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

ரூ.50 கோடி மதிப்புள்ள 1,339 கிலோ கஞ்சாவை அழிக்க, நீதிமன்றத்தில் அண்மையில் உத்தரவு பெறப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி வெப்ப நிலையில் 1,339 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை எரித்து அழிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் துறை தலைமையிட கூடுதல் ஆணையா் ஏ.ஜி.பாபு, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் சக்திவேல், தடயவில் அறிவியல் துறை உதவி இயக்குநா் தேவராஜன் ஆகியோா் கஞ்சா அழிப்புப் பணியைக் கண்காணித்தனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.