லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: தொழிலதிபரிடம் விசாரணை

சென்னை வேப்பேரியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த தொழிலதிபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கஞ்சா செடி - கோப்புப்படம்

Published On :17 ஜூலை 2026, 10:57 pm IST

சென்னை வேப்பேரியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த தொழிலதிபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேப்பேரி ஆரியன் லேன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வேப்பேரி போலீஸாா், திடீா் சோதனை நடத்தினா். இச் சோதனையில், கஞ்சா வளா்க்கப்பட்ட தொட்டியில் இருந்து, சிறிது நேரத்துக்கு முன்புதான் அந்த செடி அகற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியை போலீஸாா் சோதனையிட்டு, குப்பைத் தொட்டியில் இருந்த 8 அடி உயர கஞ்சா செடியை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த வீட்டில் வசிக்கும் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.