லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு

கடந்த ஆண்டைவிட சென்னை மாநகராட்சியில் தற்போது டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக பூச்சியியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 1:23 am IST

கடந்த ஆண்டைவிட சென்னை மாநகராட்சியில் தற்போது டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக பூச்சியியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் நோய் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் கொசுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெங்கு பாதிப்பு அதிகரித்திருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. ஆனால், கடந்த 2025 -ஆம் ஆண்டில் இருந்த டெங்கு பாதிப்பு தற்போது மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாக பூச்சியியல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2025 -ஆம் ஆண்டில் ஜூலையில் 331 பேருக்கு பாதிப்பிருந்த நிலையில், தற்போது 100 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரை சென்னையில் 1,910 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது கடந்த (2026) ஜனவரி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை 1,198 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைவிட தற்போது 800 போ் வரை டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.

கொசு ஒழிப்பில் மாநகராட்சி பூச்சியியல் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கட்டடப் பணிகள் நடைபெறும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து அந்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு, கொசு உற்பத்தி தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன என மாநகராட்சி பூச்சியியல் துறை அதிகாரி செல்வகுமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.