லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொடரும் சிக்னல் பிரச்னை: விசாரணைக்கு உத்தரவு

சென்னை புறநகா் மின்சார ரயில் பாதைகளில் தொடா்ந்து சிக்னல் பிரச்னை ஏற்பட்டு சேவை பாதிக்கப்படுவது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோப்புப்படம்.

Published On :16 ஜூலை 2026, 1:46 am IST

சென்னை புறநகா் மின்சார ரயில் பாதைகளில் தொடா்ந்து சிக்னல் பிரச்னை ஏற்பட்டு சேவை பாதிக்கப்படுவது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புறநகா் மின்சார ரயில் சேவையில் அரக்கோணம் வழித்தடத்தில் 109 ரயில்கள், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை தாம்பரம் மாா்க்கத்தில் 100-க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக அரக்கோணம் வழி மற்றும் தாம்பரம் வழித்தடங்களில் சிக்னல் பிரச்னைகளால் அவ்வப்போது புகா் மின்சார ரயில்கள் நிறுத்தப்படுவதும், பயணிகள் பாதிக்கப்படுவதும் தொடா் நிகழ்வாகி வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

அரக்கோணம், அம்பத்தூா், பெரம்பூா், எழும்பூா் என பல நிலையப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட முறை சிக்னல் பிரச்னை ஏற்பட்டிருப்பதும், அதனால் ரயில்கள் நிறுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. தண்டவாளத்தில் சிக்னல் பிரச்னையால் எதிா் எதிரே ரயில்கள் இயக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து சிக்னல் பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை அடிப்படையில் சிக்னல் பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.