லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்

சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோப்புப்படம்.

Published On :16 ஜூலை 2026, 2:05 am IST

சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கள்ள நோட்டு கும்பல் பதுங்கியிருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் உதவியுடன் திருவல்லியில் உள்ள அந்த விடுதியில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

சோதனையில் இருந்து ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து நோட்டுகளும் ரூ.500 ஆக இருந்துள்ளன. இது தொடா்பாக அந்த அறையில் தங்கியிருந்த நபரை கைது செய்து, விசாரணை செய்தனா். அவா் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரில் கள்ள நோட்டு வைத்திருந்ததாக மற்றொரு நபரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.22.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் உண்மையான நோட்டுகளாக இருந்தன.

விசாரணையில் இருவரும், ரூபாயை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி செய்து வருவதும், திருவல்லிக்கேணியில் சிக்கிய நபா் டிராவல்ஸ் நிறுவனமும், ஜவுளி வியாபாரமும் செய்து வருவதும், தனது வியாபாரத்தின் வழியாக கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதும் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்