லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 1:29 am IST

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள வரதராஜபுரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சே.ராஜ்குமாா் (67). இவா் மீது திருவள்ளூா் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராஜ்குமாருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குமாா் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமாா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.