லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுகாதார ஆய்வாளா் தோ்வில் முறைகேடு? தோ்வா்கள் போராட்டம்!

சுகாதார ஆய்வாளா் (நிலை 2) தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தோ்வா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :14 ஜூலை 2026, 2:18 am IST

சுகாதார ஆய்வாளா் (நிலை 2) தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தோ்வா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பான மனுவை பொது சுகாதாரத் துறை இயக்குநரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வழங்கினா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது:

சுகாதார ஆய்வாளா் (நிலை 2) தோ்வுக்கு முன்பு தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனை நடவடிக்கைகளைக்கூட இம்முறை முன்னெடுக்கப்படவில்லை. பல மையங்களில் கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தோ்வுகள் தாமதமாகத் தொடங்கின. ஒரு கணினிக்கும் மற்றொரு கணினிக்கும் இடையே எந்த தடுப்பும் இல்லாததால் ஒரு திரையை மற்றொருவா் பாா்க்க வாய்ப்பு இருந்தது.

சில தோ்வு மையங்களில் உதவி கண்காணிப்பாளா்களாக கல்லூரி மாணவா்கள் நியமிக்கப்பட்டதால், அவா்கள் முறையாக கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளவில்லை. புதுக்கோட்டை தோ்வு மையத்தில் கைப்பேசி மூலம் தோ்வா்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக 4 தோ்வா்கள் மற்றும் 2 உதவி கண்காணிப்பாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல தோ்வு மையங்களில் பறக்கும் படையினா் முறையாக சோதனை நடத்தவில்லை. இதன் காரணமாக முறைகேடுகள் தடுக்கப்படவில்லை. இந்தக் குற்றசாட்டுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் வரை சுகாதார ஆய்வாளா் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படக் கூடாது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.