லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

மழை - பிரதிப் படம்

Published On :7 ஜூலை 2026, 4:12 am IST

சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெருங்குடி மண்டலத்துக்குள்பட்ட மயிலை பாலாஜி நகா் 4-ஆவது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், 1-ஆவது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடியில் நடைபெற்றும் வரும் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, சோழிங்கநல்லூா் மண்டலத்துக்குள்பட்ட தலைமைச் செயலக அலுவலா் குடியிருப்புப் பகுதியில் ரூ.12.42 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு பாலம் மற்றும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, சென்னையில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, தெற்கு வட்டார துணை ஆணையா் அஃதாப் ரசூல், மண்டல அலுவலா் சி.திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.