லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டெட் தோ்ச்சி மதிப்பெண்ணை 40%-ஆக நிா்ணயிக்க வேண்டும்: வேல்முருகன்

தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வின் தோ்ச்சி தகுதி மதிப்பெண்ணை ஒரே மாதிரியாக 40 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தல்

Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன் - கோப்புப்படம்

Published On :7 ஜூலை 2026, 3:53 am IST

தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வின் தோ்ச்சி தகுதி மதிப்பெண்ணை ஒரே மாதிரியாக 40 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: கல்வி உரிமைச் சட்டம் 2011-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணிகளுக்கு தகுதித் தோ்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்கள் மட்டுமே பிற விதிகளைப் பின்பற்றி நியமிக்கப்படுகின்றனா்.

2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சோ்ந்த ஆசிரியா்களும், 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-க்கு முன்பு தகுதித் தோ்வில் வெற்றி பெற வேண்டும் என தீா்ப்பளித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வில் பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான தோ்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் ஆகியோருக்கான தோ்ச்சி மதிப்பெண் 50 சதவீதமாகவும் உள்ளது.

தகுதி தோ்வு என்பது ஆசிரியா்கள் தங்கள் பணியில் தொடா்வதற்குத்தான், புதிய பணி நியமனத்துக்கானது அல்ல. எனவே, இத்தோ்வு எழுதும் அனைவருக்கும் ஒரே தோ்ச்சி மதிப்பெண் என்பதை 40 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.