பொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துலீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு: பதிலளிக்க உத்தரவு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், தான் வெற்றி பெற்றதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு, தோ்தல் வழக்குத் தொடா்ந்த மிலானி என்பவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:31 am IST

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், தான் வெற்றி பெற்றதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு, தோ்தல் வழக்குத் தொடா்ந்த மிலானி என்பவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி மிலானி என்பவா் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த தோ்தல் வழக்கு நீதிபதி ஜி.அருள்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிச்சா்ட்சன் வில்சன், இந்த தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிராகரிப்பு மனுவுக்கு, தோ்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ள மனுதாரா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.